Sunday, June 14, 2026 9:58 pm
இந்தியாவின் சங்கமம் குளோபல் அக்கடமி , இலங்கையின் சங்கமிழ் லியா ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்த பரதநாட்டிய கின்னஸ் உலக சாதனை காலிமுகத்திடலில் இன்று நடைபெற்றது.
பாரம்பரிய நடனம் ,கலாசாரப் பாரம்பரியத்தைக் கொண்டாடும் விதமாக, இலங்கை, இந்தியா ,பல நாடுகளிலிருந்து சுமார் 5000 நடனக் கலைஞர்களை ஒன்றிணைந்து சாதனை செய்தனர்.
இந்த அதிகாரப்பூர்வ சாதனை முயற்சியின் ஒரு பகுதியாக, பாரம்பரிய உடைகளை அணிந்திருந்த பங்கேற்பாளர்கள், பயிற்சியாளர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஒத்திசைவான பரதநாட்டிய அசைவுகளை நிகழ்த்தினர். இந்த நிகழ்ச்சி மற்றும் நடுவர் தீர்ப்பு செயல்முறையைத் தொடர்ந்து, கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழ் முறையாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் மற்றும் அமைப்பாளர்கள் சார்பாக, இலங்கைக்கான இந்திய உயர் ஆணையர் சந்தோஷ் ஜா கின்னஸ் உலக சாதனைச் சான்றிதழைப் பெற்றுக்கொண்டார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்தச் சாதனைக்காக நடனக் கலைஞர்களையும் அமைப்பாளர்களையும் வாழ்த்தியதோடு, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான மக்கள் உறவுகளை வலுப்படுத்துவதில் கலாசாரத்தின் பங்கையும் எடுத்துரைத்தார்.



