Sunday, July 12, 2026 2:36 pm
கட்டார் நாட்டின் முன்னாள் அமீர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி இன்று காலமானார். அவருக்கு வயது 74. கத்தாரின் தந்தை என்று அழைக்கப்பட்டு வந்த இவரது மரணத்துக்கு உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கட்டார்நாட்டின் தலைவரை அமீர் என்று அழைக்கிறார். அமீர் என்றால் மன்னர் என்றும் பொருள்படும். ‘அமீர்’ஆக இருப்பவர் தான் நாட்டின் உச்சபட்ச அதிகாரம் கட்டார் நாட்டின் அமீராக கடந்த 1993ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை செயல்பட்டவர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி இன்று மறைந்துள்ளார்.
கட்டாரின் அமீராக ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி பதவி வகித்தபோது நாட்டின் வளர்ச்சிக்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். கட்டாரை எண்ணெய் வளமிக்க நாடாக மாற்றியதில் முக்கிய பங்காற்றினார். இவரது தலைமையின் கீழ் நாடு பொருளாதாரம், சமூகம் , கலாசாரம் உள்ளிட்டவற்றில் மேம்பட்டது. இவரது பதவிக்காலத்தில் 1996ம் ஆண்டில் Al Jazeera எனும் சர்வதேச செய்தி நிறுவனம் தொடங்கப்பட்டது.
2013ம் ஆண்டில் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி தனது அமீர் பதவியில் இருந்து விலகினார். அந்த பொறுப்பில் தனது 33 வயது மகன் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானியிடம் வழங்கினார். ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானி தான் கத்தார் நாட்டின் அமீராக இருந்து நாட்டை வழிநடத்தி வருகிறார்.

