Tuesday, September 1, 2026 12:12 pm
இலங்கையில் கடந்த ஓகஸ்ட் மாதம் 10,157 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்த ஆண்டின் மொத்த நோயாளரின் எண்ணிக்கை 95,493 ஆக உயர்ந்துள்ளது.டெங்கு தொடர்பான மொத்த மரணங்கள் 72 பதிவாகியுள்ளன. இதன் இறப்பு விகிதம் 0.076% ஆகும்.
மேற்கு மாகாணத்தில் அதிகபட்சமாக 50,506 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், சுகாதார அமைச்சு 50 பிரிவுகளை அதிக அபாயமுள்ள பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளது.

