Wednesday, September 9, 2026 1:26 pm
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு இடையே கொழும்பில் நடைபெற்ற சந்திப்பைத் தொடர்ந்து, இலங்கையும் இந்தியாவும் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் (MoUs) கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தங்கள், இரு நாடுகளின் தேசிய மாணவர் படைகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு, அவற்றின் தேசிய பாதுகாப்பு கல்லூரிகளுக்கு இடையேயான நிறுவன ரீதியான உறவுகள் ,இலங்கை விமானப்படையால் இயக்கப்படும் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான பராமரிப்பு ஆதரவு ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளன.
வான் பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ், இலங்கை விமானப்படையால் இயக்கப்படும் மீதமுள்ள ஆறு 40மிமீ L70 வான் பாதுகாப்பு பீரங்கிகளுக்கு இந்தியா பராமரிப்பு உதவியை வழங்கும்.
இந்த ஒப்பந்தங்கள், இராணுவப் பயிற்சி, தொழில்முறை கல்வி, உபகரணப் பராமரிப்பு , கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

