Tuesday, May 26, 2026 10:18 pm
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகும் தினசரி அதிரடித் திருப்பங்களுடன் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசலால், அண்மையில் 3 முக்கிய எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அதுமட்டுமின்றி இன்றும் ஒரு எம்.எல்.ஏ பதவி விலகிய விலகிய பரபரப்பு அடங்குவதற்குள், அதிமுகவிலிருந்து மேலும் 3 எம்.எல்.ஏக்கள் தங்களது பதவிகளை இராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சி.வி.சண்முகம் , எஸ்.பி.வேலுமணி ஆதரவு அணியைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சிலர், அதிமுகவின் தற்போதைய தலைமையின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தங்களது தொகுதிகளின் முற்போக்கான வளர்ச்சி மற்றும் தன்னாட்சிப் பணிகளைக் கருத்தில் கொண்டு, இந்த அதிருப்தியாளர்கள் விரைவில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து இராஜினாமா கடிதங்களை வழங்க வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
அரசியல் வட்டாரங்களின் தற்போதைய கணிப்புப்படி, வரும் நாட்களில் அதிமுகவிலிருந்து மொத்தம் 10 எம்.எல்.ஏக்கள் வரை அடுத்தடுத்து விலகி, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெகவிற்கு தங்களது ஆதரவை வழங்கக் கூடும் எனத் தெரிகிறது.

