Saturday, October 24, 2026 5:11 pm
எல் நினோ என்கிற பெயர் சமீபகாலமாக செய்திகளில் அடிபடுகிறது. பசிபிக் பெருங்கடலின் கடல் மேற்பரப்பு வெப்பநிலை இயல்பைவிட அதிகமாக உயரும் பருவநிலை மாற்ற நிகழ்வைத்தான் எல் நினோ என சொல்கிறார்கள். ஒருபக்கம், பூமி வெப்பமடைவதால் பனிக்கட்டிகள் உருகி கடல் மட்டம் உயரும். அதன் காரணமாக பல நாடுகள் நீரில் மூழ்கும் என்கிற செய்த பல வருடங்களாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.
சில நாட்களுக்கு முன்புகூட இமயமலை – திபெத் எல்லையில் பனிக்கட்டிகள் உருகி நேபாளத்தில் பல பகுதிகள் பாதிக்கப்பட்டது. பல ஆயிரம் பேர் உயிரிழந்தனர். பூமியில் அதிகரிக்கும் வெப்பம் காரணமாக மனிதர்கள் மட்டுமின்று உயிரினங்களும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், துருக்கியில் கடல் பகுதிகளில் வெப்ப அளவு அதிகரித்துள்ளதால் கடல் ஆமைகளின் இனப்பெருக்கம் பாதிப்பு உள்ளாகியிருக்கிறது. கடற்கரையில் ஆழமான குழியை தோண்டி முட்டையிடுவதுதான் ஆமைகளின் வழக்கம். தற்போது அதீத வெப்பத்தினால் முட்டைகள் குஞ்சு பொரிக்காமல் வீணாவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
இதுவரை பிளாஸ்டிக் பொருள்கள், மீனவர்கள் வலை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வந்த ஆமைகளுக்கு தற்போது வெப்பநிலையும் அச்சுறுத்தலாக மாறியிருக்கிறது.

