Author: Serin

யாழ்ப்பாணத்தில் பெண்கள் நடத்தும் ‘அம்மாச்சி’ உணவகத்திற்கு இலங்கைக்கான பிரித்தானியாவின் தூதுவர் ஆண்ட்ரூ பேட்ரிக் (Andrew Patrick) விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் பெண்கள் நடத்தும் ‘அம்மாச்சி’ உணவகத்தில் பாரம்பரிய யாழ்ப்பாண காலை உணவோடு அவர் தனது பயணத்தைத்…

உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து (WHO) அமெரிக்கா இன்று வியாழக்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியேற உள்ளது. 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே ஒரு நிர்வாக உத்தரவு மூலம் அமெரிக்கா உலக சுகாதார ஸ்தாபனத்தில் இருந்து…

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்திற்கு 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வத் தேர்தல் சின்னமாக விசில் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. சட்டசபை தேர்தலுக்கு சில மாதங்களே இன்னும் உள்ள நிலையில் தமிழ்நாடு அரசியல்…

தங்கத்தின் விலையில் ஓரளவு வீழ்ச்சி இன்று பதிவாகியுள்ளது. இன்று காலை நிலவரப்படி 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 4,000 ரூபாயால் குறைவடைந்துள்ளது. 24 கரட் தங்கம் ஒரு பவுண் 381,000 ரூபாயாகவும், 22 கரட்…

2025 ஆம் ஆண்டில் 23,000 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். “தேசிய ஒற்றுமைக்கான தேசிய நடவடிக்கையின் முன்னேற்றம்” குறித்து இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்,…

மத்திய ஆபிரிக்கக் குடியரசில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளுக்காக இலங்கை விமானப்படையின் 11வது படைப்பிரிவு இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. நேற்று புதன்கிழமை காலை அந்தக்குழு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த…

நியூசிலாந்தின் வடக்குத் தீவில் கனமழை மற்றும் சூறாவளியால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி பலரைக் காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு ஐந்து பிராந்தியங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. மவுண்ட் மௌங்கனுய் பகுதியில் உள்ள சுற்றுலாப் பயணிகள்…

ஜனவரி 26ஆம் திகதி முதல் நெல் சந்தைப்படுத்தல் சபையினூடான நெற்கொள்வனவு ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் கே.டீ. லால்காந்த தெரிவித்துள்ளார். கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் அமைச்சு சார் ஆலோசனைக் குழுக்கூட்டம் நாடாளுமன்றத்தில்…

உலகத் திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் 98வது ஒஸ்கார் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. நடிகை டானியல் புரூக்ஸ் மற்றும் நடிகர் லூயிஸ் புல்மேன் ஆகியோர் நேரலையில் இந்தப் பரிந்துரைகளை வெளியிட…

அநுராதபுரத்தில் மதவாச்சி – கரம்பன்குளம் பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் மதவாச்சி – துமின்னேகம பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர். குறித்த விவசாயி துப்பாக்கி சூட்டிற்கு…