Wednesday, May 20, 2026 10:22 am
இளவேனில் கால பூக்களின் பயன்பாடு என்னும் தொனிப் பொருளிலான சித்த மருத்துவ கண்காட்சி நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை (19) நவக்கிரி மத்திய மருந்தகத்தில் இடம்பெற்றது.
வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களமும், யாழ் சித்த மருத்துவ பீட துறையும் இணைந்து குறித்த கண்காட்சி மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, இளவேனில் காலத்தில் காணப்படும் 50 வகையான பூக்களின் மூலம் கிடைக்கின்ற மருத்துவ குணங்களும் அதன் மூலம் பெறப்படுகின்ற பயன்களும் தொடர்பாக குறித்த கண்காட்சி இடம்பெற்றது.
இதன்போது, யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவத் துறையினர், வடமாகாண சுதேச சித்த மருத்துவ பணிப்பாளர், சித்த வைத்தியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களமும் யாழ் சித்த மருத்துவ பீட குணபாடத் துறையும் இணைந்து குறித்த கண்காட்சி மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது, இளவேனில் காலத்தில் காணப்படும் 50 வகையான பூக்களின் மூலம் கிடைக்கின்ற மருத்துவ குணங்களும் அதன் மூலம் பெறப்படுகின்ற பயன்களும் தொடர்பாக குறித்த கண்காட்சி இடம்பெற்றது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக சித்த மருத்துவத் துறையினர், வடமாகாண சுதேச சித்த மருத்துவ பணிப்பாளர், சித்த வைத்தியர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.