Wednesday, July 8, 2026 1:38 pm
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஜூலை 6 ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 27 பேர் உயிரிழந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (8) நாடாளுமன்றத்தில் கறுப்புப் பட்டி அணிந்து கண்டனங்களை வெளியிட்டனர்.
குறித்த சம்பவத்தில் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் உள்ளடங்கலாக 27 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்புகளுக்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் தமது கண்டனங்களை வெளியிட்டனர்.
இந்தச் சம்பவம் குறித்து விரிவான மற்றும் வெளிப்படையான விசாரணைகளை நடத்த வேண்டும் எனவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

