Wednesday, May 20, 2026 3:33 pm
அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு குளத்திற்கு அருகில் ஐந்து மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளது. துருப்பிடித்து புதைந்த நிலையில் 5 மோட்டார் குண்டுகள் இன்று மீட்கப்பட்டுள்ளது.
இரகசிய தகவலுக்கு அமைவாக மீட்கப்பட்டுள்ள இக்குண்டுகள் கடந்த யுத்த காலத்தில் பாவிப்பதற்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்க்கப்பட்ட குண்டுகள் தொடர்பில் திருக்கோவில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் மீட்கப்பட்ட குண்டுகளை செயலிழக்கச் செய்வதற்காக விசேட அதிரடிப்படை பிரிவினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

