Tuesday, April 21, 2026 2:57 pm
நுவரெலியாவில் ஒருவரை துப்பாக்கியால் மிரட்டிய குற்றச்சாட்டின் காரணமாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உறவினர்களுடன் நுவரெலியா சென்றிருந்த பிரேமலால் ஜயசேகரவிற்கும்,அங்கு சுற்றுலா வந்திருந்த பயணி ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பிரேமலால் தன்னிடமிருந்த துப்பாக்கியால் அந்நபரை மிரட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இச்சம்பவத்தின் போது அவரிடம் இருந்து கைபற்றப்பட்ட துப்பாக்கிகான அனுமதி பத்திரம் 2025ஆம் ஆண்டுடன் காலாவதியாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.இந்தநிலையில் பொலிசாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைவாக முன்னால் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

