Saturday, November 28, 2026 1:27 pm
நியாயமான தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவு அளிக்கப்போவதாக திமுக அறிவித்துள்ளது. பாராளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவால், தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் அக்கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பாராளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரையொட்டி தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை [27]நடைபெற்றது. இதில் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு ஆதரவாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நவம்பர் 30ம் ஆம் திகதி லோக்சபாவும், டிசம்பர் 2ம் திகதி தி ராஜ்யசபாவும் கூடுகின்றன. கூட்டத்தில் தொகுதி மறுவரையறை, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை மத்திய அரசு கொண்டு வருகிறது. தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு இண்டி கூட்டணி கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில், திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்பி ஆ.ராசா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்:
தொகுதி மறுவரையறைக்கு ஆதரவு என்பது தமிழகத்துக்கும், நாட்டுக்கும் சாதகமான முடிவு. அனைத்து மாநிலங்களுக்கும் 50% இடங்கள் உயரும் என்பதால் மசோதாவிற்கு ஆதரவு தெரிவிக்கிறோம். தொகுதி மறுவரையறை மசோதா ஆதரவு நிலைப்பாடு என்பது புதிய முடிவு அல்ல. அரசியல் காரணங்களுக்கானது அல்ல, தற்போதைய பிரதிநிதித்துவம் எக்காரணம் கொண்டும் குறைய கூடாது, தற்போது தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 7.18 எனும் அளவில் இருக்கும் நிலையில் புதிய மசோதாவால் 7.21 என உயர்கிறது.
திமுக ஆட்சியில் அனைத்துக் கட்சிகளின் ஒப்புதலோடு சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானம் மற்றும் இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளை அழைத்து நிறைவேற்றிய தீர்மானங்களின் முடிவுகளுக்கு ஏற்ப, இந்த தொகுதி மறுவரையறை மசோதாவை திமுக ஆதரிக்கிறது என்றார்.

