Tuesday, November 24, 2026 9:01 am
வானிலை ஆய்வுத் துறையின் தகவல்படி, இன்று செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் மழை பெய்யக்கூடும். ஏனைய சில பகுதிகளில் பிற்பகல் 2 மணிக்கு மேல் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி ,மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் சில பகுதிகளில் மூடுபனி நிலவக்கூடும்.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும், திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு , அம்பாந்தோட்டை ஊடாக மாத்தறை வரையிலும் உள்ள கடல் பகுதிகளில் அவ்வப்போது கடல் கொந்தளிப்பாகக் காணப்படலாம். இச்சமயங்களில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 45 கிலோமீற்றர் வரை இருக்கலாம்.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய பலத்த காற்று, மின்னல் ,கடல் கொந்தளிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களும் மீனவர்களும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

