Tuesday, November 17, 2026 10:34 pm
உயர்கல்வித் துறையில் சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இலங்கையின் சில பல்கலைக்கழகங்களுக்கும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுக்கும் இடையிலான கல்விசார் கூட்டாண்மைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்த ஒப்பந்தங்களில் கொழும்பு, மொரட்டுவ பேராதனை ஆகிய பல்கலைக்கழகங்களும், இலங்கையின் பௌத்த , பாலி பல்கலைக்கழகமும் (Buddhist and Pali University of Sri Lanka) இடம்பெறுகின்றன.
இந்தக் கூட்டாண்மைகளின் கீழ், இந்தியா, தாய்லாந்து, சீனா , அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்களுடன் மாணவர் மற்றும் பணியாளர் பரிமாற்றங்கள், கூட்டு ஆராய்ச்சி, கல்விசார் பயிற்சி மற்றும் வெளியீடுகள் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

