Saturday, October 31, 2026 10:30 pm
வாட்ஸ்அப் பரிசுக் மோசடி மூலம் 1.455 மில்லியன் ரூபாய் மதிப்பிலான இணையவழி நிதி மோசடி தொடர்பாக, 46 வயதுடைய பெண் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் ஊடகப் பிரிவின் தகவல்படி, சந்தேகநபர் வாட்ஸ்அப் குழு ஒன்றைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட நபருக்கு மதிப்புமிக்க பரிசுப் பொதி ஒன்று கிடைக்கப்போவதாக நம்ப வைத்துள்ளார். அதன் மூலம், 1,455,000 ரூபாயைத் தனது வங்கிக் கணக்கிற்கு மாற்றச் செய்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
இந்த மோசடி புகாரைத் தொடர்ந்து, கணினி குற்றங்கள் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவு விசாரணையைத் தொடங்கியது.
விசாரணை அதிகாரிகள், நேற்று வெள்ளிக்கிழமை [30]பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையத்தில் வைத்து சந்தேகநபரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் நுேகெகோடாவைச் சேர்ந்த 46 வயதுடைய பெண் ஆவார்.இது குறித்து கணினி குற்றங்கள் புலனாய்வுப் பிரிவின் வடமேல் மாகாணப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

