Saturday, October 24, 2026 4:56 pm
விஜயை பின் தொடர்ந்து தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற சில நடிகர்களுக்கும் அரசியல் ஆசை வந்திருக்கிறது. இருவரும் தங்களின் ரசிகர்கள் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றி வருகிறார்கள். இதில், தனுஷ் இன்னும் வேகமாக இருக்கிறார்.
ஏற்கனவே ரசிகர் மன்ற கூட்டத்தில் கொடி அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், டெல்லியில் கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும், 2028ம் வருடம் தனுஷ் தனது அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் எனவும் 2031 தேர்தலை அவர் குறி வைத்திருப்பதாகவும் செய்திகள் உலா வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் அவர் டெல்லிக்கும் சென்று வந்ததாகவும் ஒரு செய்தி உண்டு.
இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அமைச்சர் மரிய வில்சன் ‘தனுஷெல்லாம் விஜய்க்கு போட்டியே கிடையாது. யார் வந்தலும் ஒரே முதல்வர் விஜய் மட்டுமே. அவருக்கு யாரும் போட்டியில்லை’ என கூறியிருந்தார். இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு ‘எப்போது பதில் சொல்ல தொடங்கிவிட்டார்களோ அப்போதே அவர்களுக்கு பயம் வந்துவிட்டது என அர்த்தம்’ என தெரிவித்தார்.

