Wednesday, October 21, 2026 7:56 pm
தென்மேற்கு கொலம்பியாவில் சட்டவிரோத தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர் , ஏழு பேர் காயமடைந்தனர்.
நாரினோ மாகாணத்தில் உள்ள சாண்டா பார்பரா டி இஸ்குவாண்டே நகராட்சியின் ஒரு கிராமப்புறப் பகுதியில் இந்தச் சரிவு ஏற்பட்டது. தேடுதல் , மீட்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக நாரினோ ஆளுநர் லூயிஸ் அல்போன்சோ எஸ்கோபார் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முறைசாரா ,சிறு அளவிலான சுரங்கத் தொழிலாளர்களை முறைசார்ந்த துறைக்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளைத் துரிதப்படுத்துமாறு தேசிய அரசாங்கம், தேசிய சுரங்க முகமை மற்றும் சுரங்கங்கள் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தை ஆளுநர் வலியுறுத்தினார். மேம்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை, வேலை நிலைமைகளையும் பாதுகாப்புத் தரங்களையும் வலுப்படுத்த உதவும் என்றும் அவர் தெரிவித்தார்.

