Wednesday, September 9, 2026 12:53 pm
தமிழக ட்டப்பேரவையில் விஜய் பேசிய உரை, அரசியல் அரங்கில் மட்டுமல்லாமல் சமூக வலைத்தளங்களிலும் மிகப்பெரிய கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, அவரது சட்டப்பேரவை உரையின் வீடியோக்கள் யூடியூப்பில் பெற்றுள்ள பார்வைகள், அந்த பேச்சுக்கு கிடைத்திருக்கும் டிஜிட்டல் வரவேற்பை வெளிப்படுத்துகின்றன.
பாலிமர் நியூஸ் மட்டும் 1.05 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. புதிய தலைமுறை சுமார் 55 இலட்சம், CNBC சுமார் 10 இலட்சம், சத்யம் சுமார் 15 இலட்சம், News24×7 சுமார் 15 இலட்சம், தந்தி டிவி சுமார் 20 லட்சம் பார்வைகளை பெற்றுள்ளன. இதுதவிர சன் உள்ளிட்ட மேலும் பல சனல்களின் வீடியோக்களும் குறைந்தபட்சம் 10 இலட்சம் பார்வைகளை கடந்துள்ளன.
இவற்றை ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, விஜய்யின் தமிழக சட்டப்பேரவை உரை தொடர்பான யூடியூப் பார்வைகள் சுமார் 2.3 கோடி என்ற அளவை எட்டியிருப்பதாக தெரிகிறது.

