Tuesday, September 1, 2026 4:38 pm
ஐந்து முறை டூர் டி பிரான்ஸ் சம்பியனும், வெற்றி பெறுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டவருமான சைக்கிள் ஓட்ட வீரர் தடேஜ் போகசார், சனிக்கிழமையன்று நடைபெற்ற பந்தயத்தின் எட்டாவது கட்டத்தின் போது விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, ஸ்பானிஷ் வுல்டாவிலிருந்து விலகினார்.
ஸ்லோவேனியாவைச் சேர்ந்த இவர், பந்தயத்தில் பெரும் முன்னிலையில் இருந்தார், ஆனால் பந்தயத்தின் முடிவிலிருந்து சுமார் 33 கிலோமீற்றர் (20.5 மைல்கள்) தொலைவில் விபத்தில் சிக்கினார். அவர் மீண்டும் தனது பைக்கில் ஏற முயன்றார், ஆனால் அவரால் தொடர்ந்து செல்ல முடியவில்லை, பின்னர் ஆம்புலன்ஸை நோக்கி நடந்தே சென்றார். அவர் பந்தயத்திலிருந்து விலகியதை பந்தய அமைப்பாளர்கள் உறுதிப்படுத்தினர்.
யுஏஇ டீம் எமிரேட்ஸ் அணியின் தலைவரான இவர், மூன்று கிராண்ட் டூர் பந்தயங்களிலும் வெற்றி பெற்ற ஒன்பதாவது ஆண் வீரர் என்ற பெருமையைப் பெற முயன்று வந்தார். ஜூலை மாதம், போகசார் தொடர்ந்து மூன்றாவது முறையாக டூர் டி பிரான்ஸ் பட்டத்தையும், ஒட்டுமொத்தமாக ஐந்தாவது முறையாக சாதனைக்கு நிகரான வெற்றியையும் பெற்றார். 2024-ல் ஜிரோ டி இத்தாலியா பட்டத்தையும் வென்றார். 2019-ல் இந்த நிகழ்வில் தனது கிராண்ட் டூர் அறிமுகத்தை மேற்கொண்டதிலிருந்து, அவர் வுல்டா பந்தயத்தில் பங்கேற்கவில்லை.
போகாசரின் தலையிலும், இடது கை மற்றும் தோள்பட்டையிலும் வெட்டுக்காயங்கள் இருந்ததை தொலைக்காட்சி காட்சிகள் காட்டின. வீதியில் இருந்த ஏதோ ஒன்றைத் தவிர்க்க முயன்றபோது, போகசார் தனது வலதுபுறமாகத் திரும்பி மற்ற சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதினார். டூர் டி பிரான்ஸ் சம்பியனான அவர் கட்டுப்பாட்டை இழந்து, தனது ஹேண்டில்பாருக்கு மேல் தூக்கி வீசப்பட்டு, தலை ,தோள்பட்டை ஆகியன காயமடைந்தன.

