Saturday, August 15, 2026 6:46 pm
தீர்க்கப்படாத கோரிக்கைகளைக் காரணம் காட்டி, கிராம அலுவலர்கள் இன்று (15) சனிகிழமைமுதல் மறு அறிவிப்பு வரும் வரை சனிக்கிழமைப் பணிகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.
ஆகஸ்ட் 10 11 ஆகிய திகதிகளில் நடைபெற்ற இரண்டு நாள் தொழிற்சங்கப் போராட்டத்தைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அப்போராட்டத்தின் போது, அலுவலர்கள் உடல்நலக்குறைவு காரணமாகப் பணிக்கு வராமல் இருந்தனர்.
அதிகரித்த பயணப்படி, ஆட்சேர்ப்புக்கான குறைந்தபட்சத் தகுதியாகப் பட்டப்படிப்பு, கம்மன்பில குழு பரிந்துரைத்த படிகளை அமல்படுத்துதல், மற்றும் அரசு விடுமுறை நாட்களில் செய்யப்படும் பணிக்கான ஊதியம் வழங்குதல் ஆகியவை அவர்களின் கோரிக்கைகளில் அடங்கும்.
அலுவலர்கள் சனிக்கிழமைகளில் களப்பணிகளை நிறுத்திவிட்டு, மறு அறிவிப்பு வரும் வரை செவ்வாய் வியாழன் ஆகிய கிழமைகளில் மட்டுமே தங்களது கள அலுவலகங்களில் இருப்பார்கள் என்றும் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

