Sunday, July 26, 2026 7:10 pm
ஜனவரி மாதம் முதல் இன்று வரை கொழும்பிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும் 258 தீ விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக கொழும்பு தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது. இக்காலகட்டத்தில் 17 மீட்புப் பணிகளையும் இத்துறை மேற்கொண்டது.
பாதுகாப்பற்ற மின்சாரப் பயன்பாட்டு முறைகள், பணியிடங்களில் போதிய தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாதது, அவசரகால பதில் நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் இல்லாதது ,வறண்ட வானிலை ஆகியவை பதிவான தீ விபத்துகளுக்குப் பின்னால் உள்ள சில முக்கியக் காரணங்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

