Tuesday, July 14, 2026 1:50 pm
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சித் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன்,
அண்மைக் காலத்தில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை தொடர்பாகவும், அதில் இருக்கக்கூடிய புற்றுநோய் பிரிவு தொடர்பாகவும் பல்வேறுபட்ட வாதப் பிரதிவாதங்கள், இந்த வைத்தியசாலையினுடைய தேவைகள், புற்றுநோய் பிரிவுடைய தேவைகள், இது மாகாணத்தில் இருப்பதா, மத்திய அரசுக்கு இதனை கையளிப்பதா போன்ற பல பிரச்சினைகள் நடந்து வந்திருக்கின்றது.
ஆகவே, இவை தொடர்பாகவும் வைத்தியசாலையின் முழுமையான தேவைகளைப் பற்றி அறிவதற்கு, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் சார்பாக வைத்தியசாலைக்குச் சென்று, நேரடியாக அங்கு இருக்கக்கூடிய பிரச்சினைகளை ஆராய வேண்டும் என்று நாம் தீர்மானித்திருந்தோம். அந்தத் தீர்மானத்திற்கு இணங்க, நாங்கள் மூன்று பேர் அந்த விடயங்களை வைத்தியசாலை அதிகாரிகளுடன் பேசி, இங்கு இருக்கக்கூடிய தேவைகள் என்னென்ன இருக்கிறது, உடனடித் தேவைகள் என்ன, நீண்ட காலத் தேவைகள் என்ன, கடந்த காலத்தில் இது எவ்வாறு இருந்து வருகின்றது போன்ற பல விஷயங்களை நாங்கள் நீண்ட நேரம் அவர்களுடன் பேசினோம்.
பல்வேறுபட்ட தேவைகளைப் பற்றி எங்களுடன் பேசியிருக்கிறார்கள். நாங்கள் இது தொடர்பாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் இதுகளைப் பற்றிப் பேச இருக்கின்றோம். மத்திய அரசாங்கம் இந்தத் தேவைகளை எவ்வளவு தூரம் விரைவாக நிறைவேற்றும் என்று சொன்ன விடயங்களும் இருக்கின்றது, அதுகளைப் பற்றியும் நாங்கள் பேச இருக்கின்றோம்.
இந்த உடனடித் தேவைகள் என்ன என்று பார்த்து, அதற்கான உதவிகளை எவ்வளவு தூரம், புலம்பெயர் தமிழ் மக்களாக இருக்கலாம், இந்திய அரசாக இருக்கலாம், அவர்களுடைய அனுசரணையுடன் சில தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியுமா, எவ்வளவு தூரம் இவற்றைச் செய்ய முடியும் என்பதனையும் நாங்கள் அது பற்றியும் ஆராய இருக்கின்றோம்.
ஆகவே, அவ்வாறான விடயங்களைப் பற்றிப் பேசுவதுதான் எங்களுடைய ஒரு முக்கிய நோக்கமாக இருந்தது. ஒரு நல்ல சந்திப்பு, பல்வேறுபட்ட விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசியிருக்கின்றோம். ஆகவே நாங்கள், தொடர்ச்சியாக இந்த விடயங்கள் தொடர்பாக முக்கியமான அதிகாரிகளுடன் நாங்கள் பேச இருக்கின்றோம். அப்படிப் பேசியதற்குப் பிற்பாடு, நாங்கள் தொடர்ந்து என்ன செய்யலாம் என்பதை முடிவு செய்வோம் என்றார்.

