Tuesday, July 7, 2026 4:33 pm
தெற்கு சீனாவின் குவாங்சி சுவாங் தன்னாட்சிப் பகுதியின் தலைநகரான நான்னிங்கின் சில பகுதிகளில், வரலாறு காணாத மழை பனிப் பொழிவு ஆகியவற்றைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால், செவ்வாய்க்கிழமை காலை 10 மணி நிலவரப்படி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் ,எட்டு பேரைக் காணவில்லை என நான்னிங்கில் நடைபெற்ற வெள்ளத் தடுப்பு மற்றும் பேரிடர் நிவாரணம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்டது.
தற்போது நான்னிங்கின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட ஹெங்சோ நகரம் , பின்யாங் மாவட்டம் ஆகிய இரண்டிலும், சமீபத்தில் பெய்த மழை உள்ளூர் 24 மணி நேர வானிலை சாதனைகளை முறியடித்தது. பதிவான உயிரிழப்புகள் அனைத்தும் ஹெங்சோவில் நிகழ்ந்தன.
ஹெங்சோவில், மொத்தம் 84,700 குடியிருப்பாளர்கள் இந்தப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 53,808 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேற்றப்பட வேண்டிய மேலும் 660 பேரை இடமாற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பின்யாங் மாவட்டத்தில், 8,606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், மேலும் வெளியேற்றப்பட வேண்டிய 8,150 பேரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பிராந்திய நீரியல் மையத்தின்படி, காலை 7:00 மணி நிலவரப்படி, குவாங்சியில் உள்ள 55 ஆறுகளில் உள்ள 70 கண்காணிப்பு நிலையங்களில் நீர் மட்டம் எச்சரிக்கை அளவை விட 0.01 முதல் 7.46 மீற்றர் வரை அதிகமாக இருந்தது. மேலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு பல ஆற்றுப் பகுதிகளில் உயர்ந்த நீர் மட்டம் நீடிக்கும் என்றும் அது எச்சரித்தது.

