Tuesday, July 7, 2026 4:17 pm
சிரியா தலைநகர் டமாஸ்கஸில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் தங்கியிருந்த ஹோட்டல் அருகே செவ்வாய்க்கிழமை அடுத்தடுத்து குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோனை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய தலைவர்களில் மிக முக்கியமானவர்ஜனாதிபதி இமானுவல் மக்ரோன். சர்வதேச மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவது உட்பட பல விஷயங்களில் இம்மானுவேல் மாக்ரோன் பங்கு முக்கியமானது. உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வரவும் கூட மக்ரோன் தொடர்ச்சியாகப் பல முக்கிய முயற்சிகளை எடுத்து வருகிறார்.
சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷராவுடன் பேச்சுவார்த்தை நடத்த சிரியா தலைநகர் டாமாஸ்கஸுக்கு ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் சென்றிருந்தார். இதற்கிடையே அவரை குறிவைத்து கொலை முயற்சி தாக்குதல் நடந்துள்ளது.அவர் தங்கியிருந்த ஹோட்டல் அருகே தொடர் குண்டுவெடிப்புகள் ஏற்பட்டுள்ளது. பெரும் வெடிச்சத்தத்தைத் தொடர்ந்து அங்கு கரும் புகை சூழ்ந்தது. குண்டுவெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு அனைத்து வீதிகளும் மூடப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வெடிப்பு சத்தம் கேட்டதாகவும், அதன் பின்னர் வானில் கரும்புகை எழுவதைக் கண்டதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த போது இந்த குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் மக்ரோனுக்கு எதுவும் ஆபத்தில்லை. அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யார் காரணம்? இந்த குண்டுவெடிப்புக்கு யார் காரணம் என்று தெரியவில்லை. இதுவரை எந்தவொரு பயங்கரவாத அமைப்பும் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.

