Monday, July 6, 2026 11:46 am
நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் கைதிகளுக்கிடையே வெடித்த மோதல், இன்று (06) மீண்டும் தீவிரமடைந்ததையடுத்து அங்கு மிகவும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.
நேற்று இடம்பெற்ற மோதலில் இருவர் உயிரிழந்த நிலையில், இன்று ஏற்பட்ட தொடர் மோதல்களில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் மூவர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் இருவர் சிறைச்சாலை அதிகாரிகள் என தெரியவந்துள்ளது.
இதன்படி, இந்த வன்முறைச் சம்பவங்களில் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை ஐந்தாக உயர்வடைந்தள்ளமை பொது மக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகின்றது.

