Monday, July 6, 2026 10:13 am
நெடுந்தீவு உள்ளிட்ட தீவக மக்களின் அன்றாடப் போக்குவரத்து மற்றும் வாழ்வாதாரத்துடன் நெருங்கிய தொடர்புடைய குமுதினி படகின் திருத்தப் பணிகளை நேரில் பார்வையிட்டு, அதன் முன்னேற்றத்தை அவதானித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,
தீவக மக்களுக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் தொடர்ச்சியான கடல் போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்துவது மிகவும் அவசியமானதாகும். அந்த நோக்கில், திருத்தப் பணிகள் தரமாகவும் விரைவாகவும் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, தேவையான ஆலோசனைகளையும் வழங்கப்பட்டது.
அத்துடன் குமுதினி படகு மீண்டும் சேவையில் இணைவது, தீவக மக்களின் போக்குவரத்து சிரமங்களைக் குறைப்பதோடு மட்டுமல்லாது, அவர்களின் கல்வி, சுகாதாரம், தொழில் மற்றும் அன்றாட வாழ்வாதார நடவடிக்கைகளுக்கும் பெரும் பலனளிக்கும் எனவும் தெரிவித்திருந்தார். மக்களின் தேவைகளே எமது முன்னுரிமை பாதுகாப்பான மற்றும் நிலையான போக்குவரத்து சேவையை உறுதிப்படுத்த தொடர்ந்து செயற்படுவோம் எனவும் தெரிவித்திருந்தார்.

