Friday, June 12, 2026 11:40 am
அனுமதிப்பத்திரமின்றி 6000 கிலோ கழிவுத் தேயிலையை சந்தேக நபர் ஒருவர் லொறியொன்றினூடாக கொண்டு சென்ற போது சந்தேகத்தின் பேரில் ஹற்றன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (11) இரவு கைது செய்யப்பட்டுள்ளார் .
அக்கரப்பத்தனை பகுதியிலிருந்து குளியாபிட்டியாவிற்கு ஹற்றன் வழியாக கழிவுத் தேயிலையை ஏற்றிச் செல்லும் போதே ஹற்றன் – கொழும்பு பிரதான வீதியில் வைத்து பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் லொறியினை நிறுத்தி மேற்கொண்ட சோதனையின் போது உரிய அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கழிவு தேயிலையை ஏற்றிச் செல்வது உறுதி செய்யப்பட்டது.
தொடர்ந்து லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்து, மேற்கொண்ட விசாரணையின் பின்னர் கழிவு தேயிலை , கடத்துவதற்கு பயன்படுத்திய லொறி ஆகியவற்றை இன்று (12) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹற்றன் பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

