Thursday, June 11, 2026 12:13 pm
இலங்கை மத்திய வங்கியினால் இன்று (11) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதத் தரவுகளின்படி , அமெரிக்க டொலரின் விற்பனை விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று (10) அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ335.39 ஆக காணப்பட்டதனை தொடர்ந்து இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை ரூ337.82 ஆக பதிவாகியுள்ளது.
வெளிநாட்டு நாணய சந்தையின் நகர்வுகள் மற்றும் பொருளாதார காரணிகளுக்கு அமைவாக நாணய மாற்று விகிதங்களில் தினசரி மாற்றங்கள் ஏற்படக்கூடும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

