Saturday, June 6, 2026 3:12 am
தைவானில் உள்ள அதிகாரிகளைச் சந்தித்த பின்னர், நியூசிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று சீனாவிற்குள் நுழைவதற்குத் தடை விதித்ததாக பீய்ஜிங் வியாழக்கிழமை (ஜூன் 4) கூறியது. அந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கடந்த மே மாதம் பலகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் ஒரு பகுதியாக தைவானுக்குப் பயணம் மேற்கொண்டனர்.
வெளியுறவு அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸின் அலுவலகம் இந்தத் தடையை உறுதிசெய்ததுடன், இந்த நடவடிக்கையால் அவர் “ஆச்சரியமடைந்தார்” என்றும் கூறியது.
பீய்ஜிங் , வெலிங்டன் ஆகிய நகரங்களில் உள்ள சீன அதிகாரிகளிடம் இந்த விவகாரத்தை எழுப்புமாறு நியூசிலாந்து தூதர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தன்னாட்சி பெற்ற தைவான் தனது பிராந்தியத்தின் ஒரு பகுதி என்று சீனா உரிமை கோருகிறது. மேலும், அந்தத் தீவு சர்வதேச அமைப்புகளிலும் பிற நாடுகளுடனான பரிமாற்றங்களிலும் பங்கேற்பதை அது எதிர்க்கிறது.
தைவான் மீது பீஜிங் உரிமை கோருவதை வெலிங்டன் அங்கீகரிக்கும் நியூசிலாந்தின் “ஒரே சீனா” கொள்கைக்கு, இந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் பயணம் முரணானது அல்ல என்று பீட்டர்ஸின் அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்தது.

