Thursday, June 4, 2026 3:39 pm
நாட்டிலுள்ள ஐந்தில் ஒரு பாடசாலை மாணவர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சின் செயலாளர் கலாநிதி அனில் ஜசிங்க தெரிவித்துள்ளார்.
தேசிய ஊட்டச்சத்து மாதத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து வயதுக்குட்பட்ட மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகள் குறித்த அண்மைய கணக்கெடுப்புத் தரவுகளை மேற்கோள் காட்டி வளர்ச்சி குன்றல் 10.1% ஆகவும் எடை குறைவு 16.1% ஆகவும் உள்ளது என்றும், அதே சமயம் அதிக எடை அளவு 0.5% ஆக ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது என்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
பெரியவர்களிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் விகிதங்கள் குறித்த கவலைகளை அவர் மேலும் சுட்டிக்காட்டினார். உடல் பருமன் 47% பெண்களையும் 30% ஆண்களையும் பாதிக்கிறது என்றும் எதிர்காலத்தில் இந்த புள்ளிவிவரங்கள் முறையே 15% மற்றும் 6% ஆக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

