Wednesday, June 3, 2026 10:42 am
இந்திய உயர்தானிகர் “சந்தோஷ் ஜா” உள்ளிட்ட இந்திய உயர்தானிகராலய உத்தியோகத்தர்கள் குழு நேற்று (01) யாழ்ப்பாண பொது நூலகத்திற்கு விஜயம் செய்தது. இந்த விஜயத்தின் போது அப்துல் கலாமின் உருவச் சிலைக்கு இந்திய உயர்ஸ்தானிகரால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந் நிகழ்வில் யாழ் மாநகர சபை முதல்வர் , பிரதி முதல்வர் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களுடன் யாழ் மாநகர சபை ஆணையாளர் , பிரதம நூலகர் , பிரதம உதவி நூலகர் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த விஜயத்தின் போது இந்திய உயர்ஸ்தானிகரால் யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


