Sunday, May 31, 2026 12:50 pm
சிவனொளிபாத யாத்திரைக் காலம், மே 30 ஆம் திகதி நள்ளிரவில் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்தது என தலைமைப் பாதுகாவலர் வணக்கத்திற்குரிய பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்தார்.
நிறைவு சமய அனுஷ்டானங்களைத் தொடர்ந்து, புனிதப் பேழை, சமன் கடவுளின் சிலை , தெய்வீகச் சின்னங்கள் ஆகியவை பெல்மதுல்ல கல்பொத்தவெல ஸ்ரீ பாத ராஜமகா விகாரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
அடுத்த ஸ்ரீ பாத யாத்திரைக் காலம் தொடங்கும் வரை இந்தப் புனிதப் பொருட்கள் கோயிலிலேயே இருக்கும் என தேரர் தெரிவித்தார்.

