Thursday, May 28, 2026 12:11 pm
:
களுத்துறை – பள்ளிவாசல் வீதி, வெட்டுமகட பகுதியில் இன்று வியாழக்கிழமை (28) காலை துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வர்த்தகர் ஒருவரை இலக்கு வைத்து , காரில் வந்த நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவரை கைது செய்வதற்காக மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் “எஃப்.யு. வூட்லர்” தெரிவித்துள்ளார்.

