Thursday, May 21, 2026 12:51 pm
தலவாக்கலை பாமஸ்டன் தோட்டத்தில் தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று புதன்கிழமை (20) வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதியும் அதன் உதவியாளரும் படுகாயம் அடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாமஸ்டன் தோட்டத்திலிருந்து ரட்ணகிரி தோட்ட வீதியூடாக தேயிலை கொழுந்துகளை ஏற்றிச் சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
எனினும் இன்று வியாழக்கிழமை (21) காலை சாரதி நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக கண்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான லொறி பலத்த சேதம் அடைந்துள்ளதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

