Wednesday, May 20, 2026 5:01 pm
தெற்கு லெபனானில் செவ்வாய்க்கிழமை நடந்த இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 19 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 17 பேர் காயமடைந்ததாகவும் சுகாதார அமைச்சசை மேற்கோள் காட்டி அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
நபாத்தியா நகரில் நான்கு பேரும், கஃபார் சிர் நகரில் மேலும் ஐந்து பேரும் கொல்லப்பட்டனர். டயர் மாவட்டத்தின் டெய்ர் கனூன் என்-நஹர் பகுதியில், மூன்று குழந்தைகள் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். இதேபோல், ஹன்னாவியேவில் 10 பேரும், மாரகேவில் மேலும் ஏழு பேரும் காயமடைந்தனர்.
