Tuesday, May 19, 2026 8:26 pm
வெளிநாட்டில் பணிபுரியும் பெற்றோரின், பகல்நேரப் பராமரிப்பு மையங்களில் சேர்க்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு . 10,000 ரூபாமாதாந்திர உதவித்தொகை வழங்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் முடிவு செய்துள்ளது. இந்த உதவித்தொகை 2 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பொருந்தும்.
வெளிநாட்டுத் தொழிலாளி மாதத்திற்கு 400 அமெரிக்க டொலருக்கும் அதிகமாகச் சம்பாதிக்கும் குடும்பங்களுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகாரங்களுக்கான அமைச்சர்கள் கலந்தாய்வுக் குழுவிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த முயற்சிக்கு ஆரம்ப ஒதுக்கீடாக 10 மில்லியன் ரூபாஒதுக்கப்பட்டுள்ளது. இறுதி ஒப்புதல்கள் வழங்கப்பட்ட பின்னர், மாவட்டச் செயலக அலுவலகங்கள் மூலம் பணம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

