Tuesday, May 12, 2026 10:26 am
காலி – தங்கெதர , டிக்சன் சந்திப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று செவ்வாய்க்கிழமை (12) காலை 7.30 மணியளவில் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கார் ஒன்றில் வந்த இனந்தெரியாத நபர் ஒருவர் , துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் , காயமடைந்த நபர் சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் குறித்து பொலிஸார், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

