Monday, May 11, 2026 10:56 am
எம்பிலிபிட்டிய , கொடிகந்த பகுதியில் இரும்பு கம்பியால் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் கொடிகந்த , எம்பிலிபிட்டிய பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார். குறித்த நபருக்கும் , மேலும் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு தீவிரமானதன் காரணமாக , இந்த கொலை செய்யப்பட்டுள்ளமை முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காக எம்பிலிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

