Wednesday, May 6, 2026 11:55 am
செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் எலும்புக்கூடு உட்பட இரண்டு மனித எலும்புக்கூடுகள் நேற்று செவ்வாய்க்கிழமை (05) அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 8ஆம் நாள் அகழ்வு பணிகள் நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்றன. அதன்போது 5 என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்ட நிலையில் குழந்தை ஒன்றின் என்பு கூட்டு தொகுதி உட்பட 2 என்பு கூடு அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதுவரையான காலப்பகுதியில் செம்மணி மனித புதைகுழியில் 255 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு அவற்றில் 249 மனித என்பு கூட்டு தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை புதைகுழிக்குள் காணப்பட்ட சந்தேகத்திற்கு இடமான கறுப்பு நிற மண்ணிற்குள் இருந்து எரிந்த நிலையில் சில என்புகளும், நாணய குற்றிகளும், தங்க ஆபரணம் எனக் கூறக்கூடிய ஆபரணம் ஒன்றும் சான்று பொருட்களாக மீட்கப்பட்டுள்ளன.


