Wednesday, May 6, 2026 10:23 am
கண்டி – கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவில்மட பகுதியில் தனது வீட்டின் பாதுகாப்பு வேலியை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த முதியவர் ஒருவர் கிரைண்டர் இயந்திரத்தால் கழுத்து அறுபட்டு உயிரிழந்துள்ளார்.
இவ் விபத்து நேற்று செவ்வாய்க்கிழமை (05) காலை நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் தனது வீட்டின் பாதுகாப்பு வேலியைப் பழுதுபார்ப்பதற்காகப் பயன்படுத்திய கிரைண்டர் இயந்திரத்தால் கழுத்து அறுபட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

