Monday, May 4, 2026 9:03 am
தமிழகத்தில் இன்று காலை தொடங்கிய வாக்கு எண்ணிக்கையில், தபால் வாக்குகள் பிரிவில் ஆளும் கட்சியான திமுக வலுவான முன்னிலையை பெற்றுள்ளது. தற்போதைய நிலவரப்படி திமுக கூட்டணி 47 இடங்களில் முன்னிலை வகித்து முதலிடத்தில் நீடிக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக 19 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்தத் தேர்தலில் தபால் வாக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் காட்டியுள்ளது. அக்கட்சி 8 இடங்களில் முன்னிலை பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. இருப்பினும், நாம் தமிழர் கட்சி இன்னும் தனது கணக்கைத் தொடங்கவில்லை.

