Monday, April 27, 2026 4:29 pm
வெளிநாடு செல்வதற்காக கட்டுநாயக்கா விமானநிலையத்திற்கு சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் பலகொல்லாகம பகுதியில் உள்ள தெதுறு ஓயாவில் நீராட சென்ற வேளை எதிர்பாராத விதமாக உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் அநுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மஹவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

