Monday, April 27, 2026 10:50 am
தடம் புரண்ட “சாகரிகா” ரயில் இன்று திங்கட்கிழமை (27.04.2026) முதல் மீண்டும் தனது சேவைகளை ஆரம்பிக்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளதுடன்,வழமையான கால அட்டவணைக்கு அமைவாக இயங்கும் என போக்குவரத்து அத்தியட்சகர் ‘அசாங்க சமரசிங்க’ தெரிவித்துள்ளார்.
விபத்து இடம்பெற்ற போது ரயிலில் பணியில் இருந்த நான்கு ஊழியர்களான ரயில் ஓட்டுநர், உதவி ஓட்டுநர், பாதுகாவலர் மற்றும் உதவிப் பாதுகாவலர் ஆகியோர் விசாரணைகள் முடியும் வரை பணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளனர்.
தொழில்நுட்பக் கோளாறு உள்ள ரயில்களை சேவையில் இருந்து நிறுத்தவும், வேகக் கட்டுப்பாடுகளைக் கண்டிப்பாகப் பின்பற்றவும், ரயில் ஓட்டுநர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக இணைப்பாளர் “இந்திக தொடங்கொட”தெரிவித்துள்ளார்.

