Monday, April 13, 2026 3:35 pm
யாழ் மாவட்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்றுவரும் பிரபல துடுப்பாட்ட போர்களுள் ஒன்றான மானிப்பாய் இந்துக் கல்லூரி மற்றும் சாவகச்சேரி இந்துக் கல்லூரி அணிகளுக்கிடையிலான “இந்துச் சகோதரர்களின் பெரும் போர்” எதிர்வரும் 30 மற்றும் மே 1 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளதாக குறித்த போட்டியின் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் இரு இந்துக் கல்லூரிகளினதும் அதிபர்கள் மற்றும் துடுப்பாட்ட அணிகளினது தலைவர்கள் பங்கேற்புடன் இன்று கூட்டு ஊடக சந்திப்பொன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஏற்பாட்டுக் குழு மேலும் தெரிவிக்கையில்,
மூன்றாவது ஆண்டாக நடைபெறவுள்ள இந்த பெரும் போர் இம்மாதம் 30 மற்றும் மே 1 ஆகிய திகதிகளில் மானிப்பாய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது. கடந்த இரு பெரும்போர்களும் இரு அணிகளும் சம அளவில் திறமைகளை வெளிக்காடி இருந்த நிலையில் சம நிலையில் வெற்றி தோல்வி இன்றி நிறைவுற்றது.
இந்த தொடருக்கு இரு பாடசாலைகளது பயிற்சியாளர்களும் தமது பாடசாலைகளின் வெற்றிக்கான வியூகங்களை மேற்கொண்டுவரும் நிலையில் வரும் 30 மற்றும் மே 1 ஆகிய நாள்களில் ரசிகர்களுக்கு நட்பு ரீதியான திறமைகளை காண்பிக்க இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

