Wednesday, April 8, 2026 4:32 pm
ஜெயிலர் பட விழாவில் ரஜினி காக்கா, கழுகு கதையை சொன்ன பின் விஜய் ரசிகர்களின் எதிரியாக மாறினார். அதிலிருந்து ரஜினி படம் எப்போது வெளியானாலும் அதற்கு எதிராக நெகட்டிவ்வான விமர்சனங்களை விஜய் ரசிகர்கள் பரப்பி வருகிறார்கள்.
தமிழக வெற்றி கழகம் வருகின்ற சட்டமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கிறது.. அதேபோல் விஜய் எங்கு பிரச்சாரத்தை சென்றாலும் அவர் வாகனத்திற்கு முன்னும் பின்னும் இரு பக்கத்திலும் இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும், ரசிகர்களும் இருசக்கர வாகனஙக்ளில் போகிறார்கள். அப்படி செல்லும் பொழுது சிலர் விபத்திலும் சிக்குகிறார்கள். தஞ்சாவூரில் கல்லூரி மாணவர் ஒருவர் இப்படி விபத்தில் சிக்கி மரணமடைந்தார். ஒவ்வொரு முறை விஜய் வெளியே வரும்போதும் அவரை அருகில் பார்க்க ஆசைப்பட்டு இளைஞர்கள் பைக்கில் சென்று கீழே விழுந்து விபத்தில் சிக்குகிறார்கள்.
இந்நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ‘நடிகர்கள் பின்னால் செல்வதை ரசிகர்கள் நிறுத்த வேண்டும். படிப்புதான் முக்கியம். நடிகர்கள் பின்னால் சென்று கீழே விழுந்து காயமடைந்தால் உங்களுக்குதான் ஆபத்து. உங்கள் கவனமும் செயலும் படிப்பில் மட்டுமே இருக்க வேண்டும். அதேபோல் மது பழக்கம் உள்ளிட்ட போதைப்பொருள் பழக்கங்களை பழகாதீர்கள். உங்கள் நண்பர்கள் யாரேனும் அப்படி பழகி இருந்தால் அவர்களை விட்டு விலகியிருங்கள். படிப்புதான் முக்கியம்.. படிக்காமல் விட்டுவிட்டால் எதிர்காலம் நாசமாகிவிடும்’ என்று அறிவுரை சொல்லியிருக்கிறார்.

