Tuesday, April 7, 2026 12:35 pm
நெடுந்தீவு மக்களின் உடனடித் தேவைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினர்கள் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
நெடுந்தீவு பிரதேச மக்கள் எதிர்நோக்கும் குடிநீர், போக்குவரத்து மற்றும் வீதிகள் அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் உடனடித் தீர்வுகளை எதிர்பார்த்து மூன்று பிரதான கோரிக்கைகளுக்கு தீர்வினை பெற்றுக்கொள்ள குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
குறித்த சந்திப்பு தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பொன்றை முன்னெடுத்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினர்கள் ஆளுநருடனான சந்திப்பு தொடர்பில் தெரிவித்துள்ளனர்.

