Monday, April 6, 2026 2:23 pm
சென்னையில் பிரபல சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் கயல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சுபாஷினி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த இவர் பெங்களூரில் தனது கணவருடன் வசித்து வந்த நிலையில் படப்பிடிப்புகள் காரணமாக சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர் திடீரென உயிரிழந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சுபாஷினியின் உடலை கைப்பற்றியுள்ளனர். நேற்று இரவு தனது கணவருடன் வீடியோ கால் பேசிய போது ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

