Tuesday, March 10, 2026 4:27 pm
ஐசிசி 2026 T20 உலகக் கிண்ணத்தை மூன்றாவது முறையாக வென்று சாதனையை படைத்த இந்தியா அணிக்கு பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 96 ஓட்டங்கள் என்ற வித்தியாசத்தில் இந்திய வெற்றி பெற்றது.
இந்திய அணிக்கு 27.48 கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியாளர்கள், பயிற்றுவிப்பாளர்கள் என அனைவருக்கும் இந்த பரிசுத்தொகை பகிர்ந்து வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

