Monday, March 2, 2026 4:29 pm
விமானப் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக இலங்கையில் தங்கியுள்ள வெளிநாட்டவர்களின் விசா காலத்தை இரண்டு வாரங்களுக்கு நீடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இந்த விசா நீடிப்புக்காக எவ்வித கட்டணங்களும் அறவிடப்படமாட்டாது என்றும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் கூறியுள்ளார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

