Monday, March 2, 2026 7:25 am
ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனி கொல்லப்பட்டதை அடுத்து, அந்நாட்டின் மத முக்கியத்துவம் வாய்ந்த கும் நகரில் உள்ள ஜம்கரான் மசூதியின் கோபுரத்தில் சிவப்பு நிற ‘பழிவாங்கும் கொடி’ ஏற்றப்பட்டது. மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிக்கும் நிலையில், இக்கொடி கமேனி ஆதரவாளர்களின் கோபத்தையும் பழிவாங்கும் உணர்வையும் காட்டுவதாக ஈரானிய ஊடகங்கள் கூறுகின்றன.
சிவப்பு நிறக் கொடி என்பது நீதியையும் பழிவாங்கலையும் குறிக்கும் என்று சொல்லப்படுகிறது. தெஹ்ரானில் நடந்த அமெரிக்க – இஸ்ரேல் கூட்டு வான் வழித் தாக்குதலில் அயதுல்லா அலி கொமேனி கொல்லப்பட்டார். இதனை ஈரானும் உறுதிப்படுத்தியுள்ளது.
கொமேனி கொலைக்கு பழிவாங்குவது எங்கள் கடமை என ஈரான் ஜனாதிபதி ஆவேசமாக கூறிய நிலையில், தற்போது ஈரானில் இந்த சிவப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

